CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா

Sep 09, 2023 | 3 min read

முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் வான்புகழ் வள்ளுவன் ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்களும், வி. ஜி. பி குழுமத்தின் தலைவரும், உலக தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான திரு. சந்தோசம் அவர்களும், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் வி.டி.ராஜேஷ் அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்புச் செய்தனர். இவ் விழாவில் மழலையர் பிரிவு மாணவர்கள் திருவள்ளுவர் போல வேடமணிந்து ஐயன் உருவச்சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. இவ் விழாவில் மாணவர்களின் நடனம், பேச்சு, நாடகம், பாட்டு ஆகிய அனைத்து நிகழ்வுகளும் கண்ணைக் கவரும் விதமாக இருந்தது. இவ் விழாவின் சிறப்பு அம்சமாக திருக்குறளில் இருந்து வினாடிவினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் உற் சாகமாகக் கலந்துகொண்டனர். மேலும் பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்புச் செய்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி மேரி ராணி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
WSB_0001

WSB_0008

WSB_0023

WSB_0024

WSB_0032

WSB_0041

WSB_0047

WSB_0055

WSB_0057

WSB_0063

WSB_0079

WSB_0080

WSB_0081

WSB_0094

WSB_0096

WSB_0101

WSB_0107

WSB_0111

WSB_0153

WSB_0161

WSB_0172

WSB_0183

WSB_0186

WSB_0195

WSB_0199

WSB_0200

WSB_0203

WSB_0211

WSB_0219

WSB_0226

WSB_0236

WSB_0243

WSB_0246

WSB_0249

WSB_0257

WSB_0258

WSB_0259

WSB_0260

WSB_0262

WSB_0264

WSB_0276

WSB_0282
WATCH UNVEILING CEREMONY